பெண்களின் கைகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியுமா?

672

hand

மிருதுவான கைகள்

கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

வறட்சியான கைகள்

கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள்.

உள்ளங்கை பள்ளம்

உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உத்தமிகள். உண்மையைப் பேசும் குணமுடையவர்கள். ஒழுக்கமானவர்கள். உள்ளங்கைகள் அதிக பள்ளமாகவும், முக்கியமான ரேகைகள் மட்டுமே நன்றாகத் தெளிவாகப் பிரகாசமாக இருந்தால் எந்தக்காலத்திலும் சரீர ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

கைகளின் நீளம்

பெண்களது கைகள் முழங்கால் அளவுக்கு நீண்டு தொங்கும்படி அமைந்திருந்தால், அவர்கள் சகல சவுபாக்கியங்களுடன் இருப்பார்கள். வாழ்க்கையின் சங்கடங்கள் எதையும் சிரித்த முகத்துடன் சகித்துக் கொள்வார்கள். கணவனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

கை விரல்கள்

பெண்களின் கை விரல்கள் மென்மையாகவும், ஒழுங்காகவும், அழகாகவும் இருந்தால் சகல சவுபாக்கியங்களும் அமைந்திருக்கும். இத்தகைய பெண்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். கணவனை மதிப்பவர்கள். எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். இனிமையாகப் பேசி, பழகக்கூடியவர்கள். நீண்ட கை விரல்களை உடைய பெண்கள் கலையார்வமுள்ளவர்கள். இசை ஞானம் உள்ளவர்களாகவோ, இசைக் கருவிகளை வாசிப்பதில் பெரிதும் வல்லவர்களாகவோ இருப்பார்கள்.

சிலர் நாட்டியத்திலும், சிலர் நடிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். கை விரல்கள் பருமனாகவும், முரடாகவும் அமையப் பெற்ற பெண்கள், உழைத்து சம்பாதித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். பொறாமைக் குணமுடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திர பாக்கியம் அமைவது அரிது. கை விரல்கள் நெருக்கமாக சேர்ந்திருந்தால், கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும், பணம் சேர்ப்பதிலேயே எப்போதும் குறியாகவும் இருப்பார்கள்.

நகங்கள்

கைவிரல் நகங்கள் சொத்தையாகவும், கறுப்பாகவும் இருந்தால் ஆயுட்காலம் முழுவதும் கஷ்டமும், வறுமையும், பலரின் பழிப்பும் உண்டாகும். விரல் நகங்கள் சிவந்து, பளபளப்பாக, அழகாகக் காணப்பட்டால் அப்பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். பெண்களது கைகள் சமமாக இருந்தால், அவர்களுக்கு எல்லா சவுபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தை நன்றாக நிர்வாகிப்பார்கள். பெரியவர்களிடம் மரியாதை மிக்கவர்கள். இவ்வாறு பெண்களின் கை அமைப்பினை வைத்தே அவர்களின் குணாதிசியங்களை தெரிந்து கொள்ளலாம்.