சொத்துக்காக பெற்ற தாயை சிறை வைத்த கொடூர மகன்!!

532

amma

தமிழ்நாட்டில் சொத்துக்கு ஆசைப்பட்ட மகன் தனது தாயை சிறை வைத்துள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவட்டார் அடுத்துள்ள தேமானூர் பகுதியை சேர்ந்தவர் பகவதியம்மாள்(60). கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் தங்கையன் இறந்துவிட்டார். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மகன்களில் ஒருவர் இறந்து விட்டார்.

மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பகவதியம்மாள் 2வது மகன், மருமகளுடன் தனக்கு சொந்தமான பெரிய ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.



கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டை தனது பெயருக்கு பகவதியம்மாளிடம் இருந்து மகன் நைசாக பேசி எழுதி வாங்கிக் கொண்டார்.

வீடு கட்டிய பின்னர் தனது தாயை வீட்டின் பின்பக்கம் உள்ள விறகுகள் அடுக்கி வைப்பதற்கு பயன்படும் சிறிய அறையில் தங்க வைத்துள்ளார்.

சரியான பராமரிப்பு இல்லாததால் முதுமை காரணமாக பகவதியம்மாள் உடல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தாயை பார்க்க அவரது மகள்கள் இருவர் வந்துள்ளனர்.

தாயின் நிலைமையை கண்டு அதிர்ந்து போய் சகோதரனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் அவர்களை மீண்டும் வராதபடி விரட்டி விட்டுள்ளார்.

இவர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால் குடியிருந்து வரும் வீட்டை விற்க போவதாகவும் அதில் வரும் பணத்தை கொண்டு நான் பிழைத்துக் கொள்வேன் என பகவதியம்மாள் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகனும் மருமகளும் ஏற்கனவே பகவதியம்மாள் தங்கியிருந்த சிறிய அறைக்குள்ளேயே சிறைவைத்தனர்.
6 மாதத்திற்கு முன் உயிருடன் கொளுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் கணவன் மனைவி இருவரும் பகவதியம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவட்டாரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்பு சிகிச்சையளிக்கப்பட்ட பதவதியம்மாள் அவர்களின் மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.