கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த புதன்கிழமை (04.10.2016) வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் கிடைக்கபெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் 104 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ள மற்றும் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் மேலும் அவர்களை பரீட்சைக்கு நெறிபடுத்திய அல்லது தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் சகல விதங்களிலும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கும் பாடசாலை குடும்பத்தின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
இவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.