அமெரிக்க பெண்ணுடன் வீடியோ சட் செய்த சவுதி இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு!!

277

arrested

அமெரிக்க இளம் பெண்ணுடன் வீடியோ சட் செய்த குற்றத்திற்காக கைதான சவுதி இளைஞர் ஒரு வார கால காவலுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது அபு சின் என்பவர் அமெரிக்க இளம் பெண்ணுடன் வீடியோ சட் செய்திருந்தார். இவர்களின் உரையாடல் அடங்கிய வீடியோ தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

இச்சம்பவத்தை அடுத்து சவுதி பொலிசார் நெறிமுறையற்ற நடத்தை காரணமாக குறிப்பிட்ட இளைஞரை கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சவுதியில் இருந்து இயங்கும் சமூகவலைத்தள பிரபலங்கள் பலரும் இளைஞர் அபு சின்னுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஒரு வார கால பொலிஸ் காவலுக்கு பின்னர் அபு சின் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ரியாத் பொலிஸ் தலைமை அதிகாரியின் செய்தி தொடர்பாளர், இளைஞர் அபு சின் சவுதி அரேபியாவின் சைபர் குற்றவியல் சட்டப் பிரிவு 6- ஐ மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளைஞர் அபு சின் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது. குறித்த வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 30 லட்சம் சவுதி ரியால் பிழையாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது விடுதலையாகியிருக்கும் அபு சின் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தாம் தற்போது நிம்மதியை உணர்வதாகவும், மேலும் இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடமாட்டேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சவுதி இளைஞர் அபு சின் மற்றும் அமெரிக்க இளம் பெண் கிறிஸ்டீனா ஆகியோர் மேற்கொண்ட உரையாடலை யூடியூப் வெளியிட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட வலைத்தளத்தில் இருவருக்குமான வரவேற்பு மிக அதிகமாக அதிகரித்தது. ஆயிரக்கணக்கானோர் குறிப்பிட்ட வீடியோவை கண்டு மகிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.