இந்த மாதிரியான ஆண்களை மட்டும் நம்பிவிடாதீர்கள்!!

214


dont

நல்ல குணமுள்ள ஆண்மகனை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவில் இருக்கும் பெண்கள், தங்கள் கனவு நனவாக வேண்டுமெனில் பொறுமையாக தங்கள் மணவாளனை தேட வேண்டும்.அவசரப்பட்டு, காதலில் விழுந்து உருக உருக காதலித்துவிட்டு, பின்னர் 6 மாதம் கழித்து அதனை சொதப்பிவிடாதீர்கள்.

அப்படி ஒரு மகனை பார்த்து அவர்கள் மீது நீங்கள் காதல் கொண்டாலும், நாளடைவில் அவர்களிடம் கீழே கூறப்பட்ட நடவடிக்கைகளை பார்த்தால் அவர்களை விட்டு விலகிவிடுங்கள், எக்காரணம் கொண்டும் நம்பாதீர்கள்.எப்போது பார்த்தாலும் டேட்டிங் செல்ல வேண்டும் என அடம்பிடிப்பார்கள். இவ்வாறு தொடர்ந்து டேட்டிங் சென்றுகொண்டிருந்தால், அவ்வித ஆண்களுக்குள் தானகவே ஒருவித பயம் ஏற்படும்.இப்போதைக்கு திருமணம் வேண்டாம். இன்னும் பொறுப்பு வரவேண்டும் அதுவரை திருமணத்தை தள்ளிப்போடலாம் என கூறிவிடுவார்கள். ஆனால் கடைசி வரை உங்களை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். அப்படி அவர்களை நீங்கள் மாற்ற முயற்சித்தால், ஏதோ அவர்கள் மீது வெறித்தனமாக காதல் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைப்பார்கள்.


உங்கள் காதலுக்கு பழைய காதலி மீது அதிக நாட்டம் இருந்தால். அவர் மிகவும் உண்மையானவர் என்ற போர்வையை அவர் மீது போர்த்திவிடாதீர்கள். உங்களுடன் இருக்கும்போது எப்போதும் அவளின் நினைவுகளை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பது, அவளுடன் இருந்த நினைவுகளை உங்களுடன் அதிகமாக பகிர்ந்துகொண்டால், அவருக்கு பழைய காதலி மீது நாட்டம் போகவில்லை என்று அர்த்தம்.

எனவே, அவளிடம் உள்ள குணநலன்களை உங்களிடமும் எதிர்பார்ப்பார். இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத நேரத்தில் உங்களுக்கும் அவருக்கும் சண்டை வரும்.


தொழிலில் அதிக கவனம் செலுத்தும் ஆண்கள், குடும்பத்தை பார்க்க மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் உங்களுக்கான நேரத்ரை ஒதுக்கமாட்டார்கள். அதனை உங்களால் அனுசரித்து செல்லமுடியும் என்றால் அவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள்.

சிறந்தவற்றையே தேர்ந்தடுக்கும் ஆண்களுடன் பழக நன்றாக இருக்கும், ஆனால் கடைசி வரை அவர் உங்களை தேர்ந்தெடுக்க மாட்டார்.

காரணம், நீங்களே சிறந்தவராக இருந்தும் கூட, உங்களை விட வேறு ஒருவர் சிறந்தவராக இருக்க கூடும் என்று தேடிக் கொண்டே இருப்பார். உங்களை விட சிறந்த ஒருவர் இவ்வுலகத்தில் எங்காவது இருப்பார் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கும்.

இன்னும் சரியான பெண்ணை காணவில்லை என்று கூறும் ஆண்கள். இது வரையில் அவர் பார்த்த நூற்றுக்கணக்கான பெண்கள் அவருக்கு சரியானவர்களாக இல்லையென்றால் நீங்கள் மட்டும் எப்படி இருப்பீர்கள் என்பதே அதற்கு காரணம்.


ஆதலால், இந்த விடயத்தில் நீங்கள் கவனமாக அவரை கையாள வேண்டும். அவர் உங்களை தேர்வு செய்வதை விட, நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு சரியான ஆண்களை தேர்வு செய்ய வேண்டும்.