யாழில் சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு!!

462

attack

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் 22ஆம் திகதி நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை அவரது வளர்ப்புத் தாயார் மூர்க்கத்தனமாக தாக்கிய காணொளி வளைத்தளங்களில் வெளியானது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் குறித்த பெண்ணை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.