இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து!!

245

interpol

கொலைகள், கொள்கைகள், பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் இடிப்படையில், 125 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 118 பேருக்கு எதிராக நீதிமன்றில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளவர்களில் ஏழு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பத்து பேரை கைது செய்ய இலங்கை இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது.

இந்தப் போதைப் பொருள் வர்த்தகர்களின் பட்டியலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரும் உள்ளடங்குவதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.