நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!!

775

dead-bodies

பதியதலாவ பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பதியதலாவ, வெஹரகொட வாவியில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது இருவரும் உயிரிழந்துள்ளனர்.

பதியதலாவ, தலாப்பிட்டிஓய பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலம் பதியதலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று இடம்பெற உள்ளன.