இலங்கையில் கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!!

600

crime

நடப்பாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியினை ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் அந்த காலப்பகுதியில் பிரதான குற்றங்களில் அதிகமாக பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

தினமும் பதிவாகும் “டி” பிரிவு குற்றங்களாக கருதப்படும் மனித கொலை, பாலியல் குற்றங்கள், வீடுகளை உடைத்தல், கொள்ளை மற்றும் திருட்டு ஆகிய ஐந்தும் இந்த பிரதான குற்றமாக கருத்திற்கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியினுள் 6126 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

எப்படியிருப்பினும் 2015ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியினுள் இந்த எண்ணிக்கை 5978ஆக காணப்பட்டுள்ளதென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 631 பிரதான குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில் 2015ஆம் ஆண்டில் குறித்த பிரதான குற்றச்சாட்டு 747ஆக காணப்பட்டுள்ளன.

செப்டெம்பர் மாதத்தினுள் 45 மனித கொலைகள் பதிவாகியுள்ள நிலையில் 22 பொலிஸ் பிரிவுகள் குறித்த கொலைகள் பதிவாகியுள்ளதாக குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகமான மனித கொலைகள் கம்பஹா பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ள நிலையில் அதன் எண்ணிக்கை 7ஆகும்.