வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்படும் மாடுகள்!!

481

 
வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடு வெட்டப்படும் நிலையத்தில் இன்று(09.10.2016) காலை சட்டவிரோதமான முறையில் மாடுகள் வெட்டப்படுவதாக தெரிவித்து அவ்விடத்திற்கச் சென்ற சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.லவன் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மாடுகளை மீட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று காலை 6 மணிக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.லவன் வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடுகள் வெட்டப்படும் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

எனினும் அங்கு பொது சுகாதார பரிசோதகர் இன்றி மாடுகள் வெட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. எனினும் பொது சகாதார பரிசோதகருக்கு அழைப்பை ஏற்படுத்தி சம்பவ இடத்திற்கு வருமாறு பணித்துள்ளார்.

காவல் கடமையில் இருந்துள்ள காவலாளியிடம் மாடுகள் வெட்டப்படுவதை நிறுத்தமாறு தெரிவித்துள்ளார். வைத்திய அதிகாரியின் கருத்தினை உதாசீனம் செய்துவிட்டு ஏழு மாட்டில் ஐந்து மாடுகள் வெட்டப்பட்டுள்ளது.

ஆவணங்கள் இன்றியும் வைத்திய பரிசோதகரின் அறிக்கைகள் இன்றியும் மாடு வெட்டப்படுவதை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

p1220034 p1220042 p1220045 p1220047 p1220049