மோட்டார் சைக்கிளில் சென்றவர் விபத்தில் பலி!!

505

bike

புத்தளம், விருதோடை, குருதிவாசல் வீதியில் பாடசாலை மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குருதிவாசல், பாலவி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.