தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டி அதிமுக தொண்டர்கள் அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் புது கூரைப்பேட்டையைச் சேர்ந்த கணேசன் என்ற அதிமுக தொண்டர் முதல்வர் உடல் நலம் குறித்து தொடர்ந்து வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அவர் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி தீக்குளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் அருகிலுள்ள விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.






