பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நேற்று (07) வெளியானது.
இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
இந்நிலையில், தர்மதுரை உள்ளிட்ட தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத தமன்னா, தேவி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபுதேவாவுடன் அதிகம் பங்கேற்றார். மேலும், தேவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா, தமன்னாவைப் புகழ்ந்து தள்ளினார்.
தமன்னாவின் நடனத்தை வெகுவாக புகழ்ந்தார். இதைக்கேட்டு அங்கேயே தமன்னா ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
இந்த சம்பவங்களையடுத்து பிரபுதேவாவும், தமன்னாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் உறுதிபட கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவை பிரபுதேவா பிரிந்த பிறகு, அவரை பல நடிகைகளுடன் தொடர்ப்புபடுத்தி கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால், இதுவரை தமன்னாவை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியானது இல்லை. இதுவே முதல் முறை.
இந்நிலையில், தமன்னா பிரபுதேவாவுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.






