வவுனியா செட்டிகுள பிரதேச செயலகத்தில் சற்றுமுன் தீவிபத்து!

582

fire

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இன்று (11.10.2016) மாலை 6 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பிரதேச செயலகத்தின் மேல்மாடி பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த 50ற்கும் மேற்பட்ட செட்டிகுள பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன் மேல்மாடி பகுதியில் இருந்த சில ஆவணங்கள் எரிந்துள்ளதாகவும் மின்னொழுக்கே இதற்கு காரணமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.