அழகிப் போட்டியில் முதன்முறையாக பிகினி உடை ரத்து!!

293

b2

வரலாற்றிலேயே முதன்முறையாக உலக அழகி போட்டியில் பிகினி உடை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான உலக அழகி போட்டி முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது.

இங்கு பிகினி உடைக்கு அனுமதி கிடையாது என்பதால் அழகி போட்டியில் இருந்தும் பிகினி உடையை போட்டி அமைப்பாளர்கள் நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து போட்டி அமைப்பாளர்கள் கூறுகையில், இந்தோனேசியாவின் பாரம்பரியம், மரபு, பழக்க வழக்கம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீச்சல் உடைப் போட்டி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இது இருக்காது இது முக்கியப் பிரச்சினை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் யாரையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம் என மிஸ் வேர்ல்டு அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பீச் பொடி போட்டிப் பிரிவு கைவிடப்படலையாம். நீச்சல் உடைக்குப் பதில் உடம்பு அதிகம் தெரியாத வகையிலான உடையை அணிந்து போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது