இலங்கையில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் அதிகரிப்பு!!

203

hiv

நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார் .

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களிலேயே குறித்த பத்து விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர் ,

நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் குறித்த பத்து விகிதம் அதிகரித்துள்ளது . இதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் எச்.ஐ.வி. தொற்றுள்ள 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 170 பேரில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் . எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமைக்கு காரணம் நாம் தொடர்ச்சியாக எச்.ஐ.வி. குறித்த பரிசோதனைகள் நாடளாவிய ரீதியில் துரித கதியில் மேற்கொண்டு வந்தமையே .இனிவரும் காலங்களிலும் நடமாடும் சேவைகளை நடத்தி எச்.ஐ.வி. குறித்த பரிசோதனைகள் சாதாரண மக்களிடம் மேற்கொள்ள திட்டமிட்டிருகின்றோம்.

விஷேடமாக விபச்சாரிகள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள், போதைப் பொருள் பயன்படுத்துவோர் பெருமளவில் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் . இவ்வாறாக பரிசோதனைகளை துரிதபடுதுவதன் மூலம் நாட்டில் எச்.ஐ.வி. பாவனையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.