தனது காமப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக தனது பிள்ளையையே தாய் பலி கொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. சத்துணவு கூடத்தில் வேலை பார்க்கும் பெண் வள்ளி.
பிச்சை அவளது கணவர். காய்கறிக் கடை ஒன்றை வைத்திருக்கும் இவர் வீட்டிலிருந்து காலையில் சென்றால் இரவு கடையை பூட்டி விட்டு வீடு திரும்பும் போது இரவு 12 மணி யாகிவிடும்.
மீண்டும் அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு சந்தைக்குப் போய் விடுவார். கணவன் மனைவிக்கிடையே தொடர்பு அதிகம் இல்லாததால் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இவர்களிருவருக்கும் ஜீவிதா என்கின்ற எல் கேஜி படிக்கும் மகள் இருக்கின்றாள். இந்த சிறுமி மீது தந்தை பிச்சைக்கு அதிக அன்பு செலுத்தி வந்துள்ளார். இந்நிலையிலேயே வள்ளிக்கு அவருடன் ஒன்றாக வேலை பார்க்கின்ற தம்பு என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
வள்ளியை விட 2 வயது குறைவான தம்புவுடனான நட்பு காலப் போக்கில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் ஒருநாள் இருவரும் வள்ளியின் வீட் டில் யாருமில்லாத சமயம் உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனால் வள்ளி தம்பு மேல் பைத்தியமாகி யுள்ளார்.
தொடர்ச்சியாக இவர்களிருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். திடீரென்று தம்புவிற்கு நிமோனியா காய்ச்சல் வந்ததைத் தொடர்ந்து சுமார் 20 நாட்களுக்கு வள்ளியைப் பார்க்க வரவில்லை.
பிரிவினை தாங்காத வள்ளி அவனைத் தேடிப் போயுள்ளார். பின்னர் காய்ச்சல் சுகமடைந் ததைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து இருவரும் தனிமையில் இருக்க, தம்புவால் பழைய மாதிரி உற்சாகமாக வள்ளியோடு சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
இதை வள்ளியால் தாங்கமுடியவில்லை. தம்புவுக்கு உறவில் விருப் பம் இல்லாததை தெரிவித்துள்ளான். இதனையடுத்து இருவரும் ஒரு சாமியாரிடம் சென்று தம்புக்கு ஏற்பட்ட நிலையினை தெரிவித்துள்ளனர்.
அப்போது குறித்த சாமியார் ஒரு பெண்ணை நர பலி கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார். அதுவும் முதல் பெண் குழந்தையை கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
உடல் இச்சைக்கு அடிமையான தாய் தனது பெற்ற மகளையே பலி கொடுக்க தயாரானாள். இதை கேட்டு அஞ்சிய தம்பு அப்படி ஒரு சுகம் தேவை இல்லை. இது பாவம் என வள்ளியைத் தடுத்தும் அவள் கேட்கவில்லை.
அடுத்த அமாவாசை அன்று மகளை ஏமாற்றி கூட்டிப் போய் கடப்பா விலுள்ள மந்திரவாதியிடம் ஒப்படைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு வள்ளிச் சென்றுள்ளார்.
கணவன் பிச்சை குழந்தையை தேட வள்ளியும் பஸ் நிலையத்தில் தவறி விட்டாள் என நாடகமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவன் பிச்சை பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முதல் கட்ட விசாரணையிலேயே வள்ளி மாட்டிக் கொண்டாள்.
இப்போது வள்ளி, தம்பு இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலை யில் குறித்த மந்திரவாதி மாயமாகியுள்ளார்.






