யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெற்ற திருமண விழாவொன்று பலரையும் கவர்ந்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த வெள்ளையின இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணைக் கரம் பிடித்துள்ளார்.
இந்த திருமணம் தமிழர் மரபுப்படி நடந்தேறியுள்ளது. தோரணம், மாவிலை, வாழை கட்டி அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மங்கள இசை முழங்க பெற்றோர் பெரியோர் இறை ஆசியுடன் நடைபெற்ற இந்த திருமண வைபவத்தில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து மணமகனின் உறவினர்கள், நண்பர்களும் வருகை தந்திருந்தனர்.
மணமக்கள் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டனர். பட்டு வேட்டு சால்வை தலைப் பாகை அணிந்து நெற்றி நிறைந்த திருநீற்றுடன் மண மேடை யில் மணமகன் காணப்பட்டார். ஹோமம், கன்னிகா தானம், திருமாங்கல்யதாரணம், சப்தததி முதலாய கிரியை களும் இடம்பெற்றன.













