ஹரி இயக்கவுள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி படம் ஹிட்டானது. 13 ஆண்டுகள் கழித்து சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார்.
சாமி படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும், அதில் நடித்த விக்ரமும் த்ரிஷாவும் இன்னும் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இதனால் இரண்டாம் பாகத்திலும் இவர்களே ஜோடி சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சாமி – 2 படத்தில் த்ரிஷாவுக்கு முக்கிய கதாப்பாத்திரத்தைக் கொடுத்துவிட்டு டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ராகுல் ப்ரீத் சிங்கை விக்ரமுக்கு ஜோடியாக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஹரி.
ராகுல் ப்ரீத் சிங் விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர். முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.






