இறந்த மனைவியின் உடலுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த கணவன்!!

521

old-man

டெல்லியில் இறந்த மனைவி உடலுடன் முதியவர் 4 நாட்கள் வீட்டில் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி என்ற இடத்தை சேர்ந்தவர் கோவிந்தராம் ஜதானி (வயது 90). இவரது மனைவி கோபிஜதானி (85). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கோவிந்தராம் ஜதானி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். கணவன் – மனைவி இருவரும் அந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வந்தனர். அவர்களுக்கு உதவியாக யாரும் இல்லை.

கோவிந்தராம் ஜதானிக்கு 90 வயது ஆகிவிட்டதால் முதுமை காரணமாக அவரது மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருந்தது. அவரை மனைவி கோபிஜதானி கவனித்துக்கொண்டார்.

கோபிஜதானி முதுமை காரணமாக உடல்நலம் இல்லாமல் இறந்துவிட்டார். அவர் இறந்ததை கோவிந்தராம் ஜதானியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர் மனைவி உடல் இருந்த வீட்டிலேயே 4 நாட்களாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கோபிஜதானி உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தான் அவர் இறந்திருப்பது தெரியவந்தது. பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் அங்கு வந்து பிணத்தை அப்புறப்படுத்தினார்கள். கோவிந்தராம் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.