தப்பிச்சென்ற 80,000 மீன்களை பிடிக்கக் கோரிக்கை!!

292

fish

டென்மார்க்கில் உள்ள தூண்டில் மீனவர்கள், சுற்றுச்சூழல் சோகமாகக் கருதப்படும் நிகழ்வு ஒன்றை தவிர்க்க, தங்கள் தூண்டில்களில் மீன்களை கவரும் பூச்சிகளை ஏற்றி, தப்பிச் சென்ற வானவில் ட்ரவுட் வகை மீன்களைப் பிடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

ஜட்லாந்து தீபகற்பத்தில் உள்ள மீன் பண்ணை ஒன்றின் மீது சரக்கு கப்பல் மோதியதில், கடலுக்குள் தப்பி சென்றதாக மதிப்பிடப்பட்ட 80 ஆயிரம் வானவில் ட்ரவுட் வகை மீன்களை, பிடித்து ஒரு வகை மீன்களால் மற்றொரு மீன் இனத்திற்கு ஏற்பட இருக்கும் சாத்தியமான பேரழிவை தடுக்க அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று கிலோ கிராம் எடை கொண்ட அந்த வானவில் ட்ரவுட் மீன்கள் , அவைகளுக்குப் பிடித்த உணவான கடல் ட்ரவுட் மீன்களின் முட்டைகளை, தின்றுவிடும் என அஞ்சப்படுகிறது.

வருடத்தின் இந்த காலங்களில் கடல் ட்ரவுட் மீன்கள் முட்டையிடுவதற்காக நதியை நோக்கி செல்லும்.

வானவில் ட்ரவுட் மீன்கள், முட்டையிட இருக்கும் கடல் ட்ரவுட் மீன்களின் வால்களை பின் தொடர்ந்து அவற்றின் முட்டைகளை தின்று விடும் என சுற்றுச் சூழல் ஆர்வலரும் மீன் பிடிப்பவருமான ஒருவர் தெரிவித்துள்ளார்.