காமக்கொடூரன் சைக்கோ உலாவுகிறான் : பெண்களுக்கு எச்சரிக்கை!!

520

JAISHANKAR

இந்திய பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த கற்பழிப்பு குற்றவாளியும், சைக்கோவுமான ஜெய்சங்கர் தப்பியோடிவிட்டதால் அவன் தனியாக இருக்கும் பெண்களை குறி வைக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய சைக்கோவான சேலத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான்.

அவனைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கர் பெண்களை கற்பழித்து அவர்களை கொடுமைப்படுத்துவதற்கு பெயர் போனவன்.



இந்நிலையில் அவன் சிறையில் இருந்து தப்பிவிட்டதையடுத்து மாநிலங்களில் உள்ள பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவன் பெங்களூரிலேயே ஒளிந்திருக்கக்கூடும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனால் தனியாக பயணம் செய்யும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜெய்சங்கர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு கருப்பு பையை வைத்திருப்பான்.

மேலும் தான் கற்பழிக்க முயற்சி செய்யும்போது அதை எதிர்த்து போராடும் பெண்களை அவன் தன் பையில் உள்ள வெட்டுக்கத்தியால் தாக்கி கொன்றுவிடுவான் என்பது குறிப்பிடத்தக்கது.