வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அவலநிலை!!

223

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் நோயாளர்களை தரையில் படுக்க வைத்து பராமரித்து வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளர்களை போதிய கட்டில் வசதியின்மையினால் தரையில் உறங்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் நோயினை குணப்படுத்துவதற்காகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றோம். அப்படி இருக்கையில் இடுப்பு வருத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நோயாளர்கள் தரையில் படுத்து மேலும் வருத்தத்தை அதிகரித்த வீடு செல்வது? வசதிகள் அனைத்தும் நிறைந்த வைத்தியசாலை. புதிதாக கட்டிடங்கள், புதிய தொழில்நுட்பங்கள் போன்றவாறாக சகல வசதிகளுடனும் மிளிர்கின்ற வைத்தியசாலை ஏன் இப்படியாக காணப்பட வேண்டும்?

இவ் விடயம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் கருத்து தெரிவிக்கையில் ,

எமது வைத்தியாசாலைக்கு தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே காணப்படுகின்றது.; 42 கட்டில்கள் மாத்திரமே கொண்ட ஒரு நோயாளர் விடுதியில் 90 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகுதி நோயாளர்களுக்கு படுக்கை விரிப்புக்கள் வழங்கப்பட்டு தரையில் படுக்க வைக்கவேண்டிய நிற்பந்தத்திற்கு உள்ளாகின்றது. விரைவில் இதற்குரிய தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

1 image-0-02-06-48b176bb9cbb7acbf20d0d09f25be2139f50dd9cb5e0b925c4013c50d1dd8b23-v image-0-02-06-acf7ed9001850fdf53a385bec46cda4f501671effa2d49d94ef10dd846118d0b-v image-0-02-06-b0f2d6467f6415481b60459ec28378db6c83fabc8f34c5933083d574b36b4daa-v image-0-02-06-e1e6956c06de064206fe381c2fa5bfeac8ae2ad5899da0729a0fac6f44e59391-v