மீண்டும் நடிக்க வருகிறார் ஜீவன்!!

355

Jeevan1யுனிவசிட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜீவன். தொடர்ந்து காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை, தோட்டா, மச்சக்காரன் ஆகிய படங்களில் நடித்தார். ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்திமாகவே அமைந்தது.

சுமார் இரண்டரை வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி இருந்த ஜீவன் தற்போது மீண்டும் அவதாரம் எடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,

கிருஷ்ணா லீலை முடிந்து ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், சில காரணங்களால் தடைபட்டு போனது. அது ரிலீஸாகி இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும். நான் கலையுலகில் பயணித்த காலம் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம் ஆனால் நடித்த படங்கள் குறைவுதான். அதனால் இந்த இடைவெளி எனக்கு பெரிதாக தெரியவில்லை.

இதையெல்லாம்விட சமீபத்தில்தான் என் அப்பா இறந்தார். எங்களுக்கு இருக்கிற வியாபாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பில் நான் இறங்கியதால் இந்த இடைவெளி.

வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததும் செல்வா சார் ஒரு கதை சொன்னார். நான் எதிர்பார்த்த திருப்தி அதில் இருந்தது. அதோடு ஏற்கனவே நானும் அவரும் நான் அவனில்லை, நான் அவனில்லை பார்ட்-2 , தோட்டா என மூன்று படங்களில் இணைந்தோம், வெற்றி பெற்றோம். இது நான்காவது முறை. தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர். பெரிய தயாரிப்பாளர். அதனால் மீண்டும் வருவேன்.

கெட்டவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறீர்களே நீங்கள் நல்லவனா கெட்டவனா என்ற கேள்விக்கு திருட்டு பயலே படத்தில் நான் மட்டுமல்ல. சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ், என எல்லோருக்குமே நெகடிவ் ரோல்தான். கிளைமாக்ஸில் நல்லவர்களாக மாறுவது மாதிரி முடித்திருந்தார் சுசிகணேசன்.

அதுமாதிரி காக்க காக்க படத்தில் முழு வில்லன். நான் அவனில்லை படத்தில் கெட்டவன் மாதிரியான நல்லவன் பாத்திரம். தோட்டாவில் கெட்டவன் ஒருவன் நல்ல போலீஸ்காரனை உருவாக்க முடியும் என்ற கதாபாத்திரம். சில கதாபாத்திரங்கள் என்னை முன்னிலைப்படுத்தியதால் அப்படியொரு வில்லன் தோற்றம் எனக்கு. அதுவும் என்னை லைம்லைடில் வைத்திருப்பதால் எனக்கு சந்தோசமே.

இனி வேட்டையை ஆரம்பித்து விட்டேன். நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் வேட்டையாடி என்னை நான் நிலைநிறுத்தி கொள்வேன். முதலில் செல்வா இயக்கும் படத்திற்கு நல்ல டைட்டிலை வேட்டையாடி கொண்டிருக்கிறோம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்று ஜீவன் கூறினார்.