ரெமோ வெற்றி விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!!

426

siva

24 AM STUDIOS நிறு­வனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயா­ரித்து, சிவ­கார்த்­தி­கேயன் இரட்டை வேடங்­களில் நடித்த ‘ரெமோ’ வெற்­றி­க­ர­மாக ஓடிக்­கொண்­டி­ருப்­பதை முன்­னிட்டு நன்றி தெரி­விக்கும் விழா நேற்று முன்தினம் நடை­பெற்­றது.

இந்த விழாவில் இயக்­குநர் பாக்­யராஜ் கண்ணன், சிவ­கார்த்­தி­கேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவி­குமார், சரண்யா பொன்­வண்ணன், சதீஷ், பி.சி.ஸ்ரீராம், அனிருத், ஒலிப்­ப­தி­வாளர் ரசூல் பூக்­குட்டி, மற்றும் பலர் கலந்து கொண்­டனர். அப்­போது சிவ­கார்த்­தி­கேயன் பேசும்­போது,

‘‘என்னை இப்­ப­டத்தில் கதா­நா­ய­க­னாக நடிக்க வைத்த பாக்­யராஜ் கண்­ண­னுக்கு நன்றி! நான் அழ­காக இருக்­கிறேன் என்று என்னை உணர வைத்­தவர் பி.சி.ஸ்ரீராம் சார். அவ­ரு­டைய ஒளிப்­ப­திவில் நடித்­தது எனக்கு மிகவும் பெருமை.

நான் லேடி கெட்­டப்பில் நடிக்கும் போது, நடிகை கீர்த்தி சுரேஷ் பல உத­விகள் செய்தார். அது மறக்க முடி­யாது. இப்­ப­டத்தின் தயா­ரிப்­பாளர் ஆர்.டி. ராஜா கடின உழைப்­பாளி.

இப்­ப­டத்­திற்­காக அதி­க­மாக உழைத்­தவர் அவர்தான். நான் 18 மணி­நேரம் வேலை பார்த்து விட்டு வீடு திரும்­புவேன். என் குடும்­பத்­துடன் இருப்பேன். ஆனால், இந்த படம் துவங்­கிய நாளி­லி­ருந்து ராஜா வீட்­டுக்கு கூட செல்­லாமல் தொடர்ந்து வேலை பார்ப்பார்.

இப்­படி வேலை செய்யும் இவரை பலர் வேலை செய்ய விடாமல் தடுக்­கி­றார்கள். நாங்கள் யாருக்கும் எந்த கெடு­தலும் செய்­த­தில்லை. ஆனால், எங்­களை வேலை செய்ய விடாமல் தடுக்­கி­றார்கள்.

ஏன் இப்­படி செய்­கி­றார்கள் என்று எங்­க­ளுக்கு தெரி­ய­வில்லை’’ என்று கூறி­ய­வாறு கண்­க­லங்­கினார் சிவ­கார்த்­தி­கேயன். ஒரு சில நிமி­டங்கள் கழித்து மீண்டும் பேசு­கையில், ‘‘எந்த ஒரு படமும் நூற்­றுக்கு நூறு பேரையும் திருப்­தி­ப­டுத்­தாது.

அப்­ப­டி­யான படத்தை யாராலும் எடுக்க முடி­யாது. சில­ருக்கு பிடிக்கும், சில­ருக்கு பிடிக்­காது. இது காலம் கால­மாக இருந்து வரு­கிற விடயம் தான். பிடித்தால் நான்­றாக எழு­துங்கள்! பிடிக்­க­வில்­லை­யென்றால் குறை­களை சுட்டி காட்­டுங்கள்! திருத்திக் கொள்­கிறோம்.

இப்­ப­டத்தின் வெற்றி எங்­க­ளுக்கு பெரும் உற்­சாகம் தரு­கி­றது. இது வெற்­றி­விழா இல்லை! இப்­ப­டத்தை வெற்­றி­பெற செய்­த­வர்­க­ளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தான்! இந்த டீம் மீண்டும் இணைந்து படங்கள் பண்ணும்! நாங்கள் முடிந்தவரை யிலும் தரமான படங்களை தர முயற்சிப்போம்’’ என்றார்.