தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் திகதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளதாகவும், இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இதனால் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் என பலர் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதா விரைவில நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக கோவிலில் முள்ளின் மீது படுத்து தனது பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளார்.






