81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பொலிவு பெறுகிறது சந்திரன் : நாசா தகவல்!!

430

moon

பூமியைச் சுற்றி வரும் சந்திரன் 81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பொலிவு பெறுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 180 குழிகள் வரை சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படுகின்றன.

விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்களால் உருவாகும் இந்த குழிகள் காலப்போக்கில் நிலவின் தோற்றத்தையே மாற்றியமைக்கின்றன. தூசுகளும் மாசுகளும் அதன் மேற்பரப்பில் படிந்து விடுகின்றன.

இதனால், 81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திரன் தனது மேற்பரப்பை மாற்றியமைக்கிறது. இந்தப் பொலிவு முன்பு இருந்ததை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனைக்கொண்டு நிலவின் வயதையும், மற்ற நட்சத்திரங்களின் வயதையும் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விண்கற்கள், வால் நட்சத்திரங்களின் தாக்குதலுக்கு பூமியும் உள்ளாகின்றது, என்றாலும், பூமியைச் சுற்றியுள்ள அடர்த்தியான வளிமண்டலம் அதனைக் காக்கின்றது.

ஆனால், சந்திரனைச் சூழ்ந்து வளிமண்டலமில்லை, ஒரு கன சென்டிமீட்டர் வரையில் வெறும் 100 வாயு மூலக்கூறுகளும் தனிமங்களுமே உள்ளன.

பூமியின் கடல் மட்ட பரப்பில் 100 பில்லியன் பில்லியன் கணக்கான மூலக்கூறுகள், ஒரு கன சென்டிமீட்டர் வரையில் காணப்படுகிறது.