இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் 10 கோடி (100 மில்லி யன்) ரசிகர்களைக் கொண்ட முதல் நட்சத்திரம் எனும் பெருமையை அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான செலீனா கோமஸ் பெற்றுள்ளார்.
23 வயதான செலீனா கோமஸ், உடல்நலக் குறைவு காரண மாக தற்போது ஓய்வெடுத்து வருகிறார். கடந்த ஓகஸ்ட் மாதத் தின் பின்னர் அவர் இன்ஸ்டகிராமில் எதனையும் வெளியிட வும் இல்லை.
எனினும், அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் அவரை இன்ஸ்டகிராமில் 8 கோடியே 92 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 11 கோடியாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் மற்றொரு இளம் பாடகியும் செலீனா வின் நண்பியுமான டெய்லர் ஸ்பிட்டை இன்ஸ்டகிராமில் 9 கோடியே 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
பாடகி பியோன்ஸேவை 8 கோடியே 55 லட்சம் பேரும் தொலைக்காட்சி நட்சத்திரமான கிம் கர்தாஷியனை 8 கோடியே 37 லட் சம் பேரும் பின் தொடர்கின்றனர்.






