
உங்களது முகநூல் கணக்காக இருக்கட்டும், மின்னஞ்சல் முகவரியாக இருக்கட்டும், அதன் பாதுகாப்பு கேள்விகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கடவுச்சொல் என்பது உங்களை அடையாளப்படுத்தும் ஒரு அந்தரங்க ஆவணம். அதனை பாதுகாப்பது உங்கள் தலையாய கடமை.
உங்கள் மாற்று அடையாள குறிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் சாதாரண தொலைபேசி இலக்கத்தையோ மின்னஞ்சல் முகவரியையோ வழங்க வேண்டாம்.
பாதுகாப்பு தொடர்பான கேள்விகளில் எவரும் கண்டுபிடிக்க முடியாத பதில்களை பதியுங்கள்.
அதேவேளை, இத்தகைய தகவல்களை குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையேனும் மீள் பரிசோதித்து, மாற்றுவதுசாலச்சிறந்தது.
உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுவது சிறந்தது. அதுவும் எவரும் கிரகிக்க முடியாதபடி மாற்றுவது சிறந்தது.