கணவனின் கடனை அடைப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்!!

553

positute

காலி மக்குலுவ பிரதேசதத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை காலி பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

காலி பிராந்திய மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் பாலியல் தொழில் ஈடுபட்ட பெண்ணும் அதன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவன் பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்காக தான் இந்த தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நாராம்பலை பிரதேசத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த போது கணவன் வெளிநாடு செல்வதற்காக, வாடகைக்கு தங்கியிருந்த வீட்டுப் பெண்ணிடம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கடனாக பெற்றார்.

என்னை பிணையாக வைத்து கொண்டு அந்த பெண், எனது கணவருக்கு பணத்தை கொடுத்தார்.

தற்போது நான் 100க்கு 15 வீதம் வட்டியை செலுத்தி வருகின்றேன். வட்டி பணத்தை கொடுக்கும் வரை வீட்டில் உள்ள அந்த பெண், அலுமாரியில் உள்ள உடைகளை கூட அணிய இடமளிக்க மாட்டார்.

பிள்ளையை பராமரித்து கொண்டு வருகின்றேன். எனக்கு எவரும் உதவுவதில்லை எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.