திருகோணமலை முத்துநகர் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(15) உயிரிழந்துள்ளதாக சீனக் குடா பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
திருகோணமலையில் இருந்து கல்லோயாவுக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான நிரோசன் மதுசங்க (24 வயது) என்பவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நபரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.






