உடல் முழுவதும் செயலிழந்த குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழிக்கோடு நெடுவிளையை சேர்ந்தவர் டென்னிஸ்குமார். இவரது மனைவி சுஜாமேரி. இவர்களுக்கு மார்த்தாண்டம் தனியார் வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் அந்த குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லை. பின்னர் கண்பார்வையும் போனது. தனியார் வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
குமரி முதல் சென்னை அரசு தலைமை குழந்தை வைத்தியசாலை வரை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்து விட்டனர். ஆனால் குழந்தையின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் எதிரில் குழந்தையுடன் பெற்றோர் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.