2 டேபிள் ஸ்பூன் ரத்தத்துடன் பிறந்த அதிசய குழந்தை!!

576

625-0-560-350-160-300-053-800-668-160-90
இங்கிலாந்தை சேர்ந்த தம்பதியினருக்கு பிறந்த குழந்தையின் உடலில் 2 டேபிள் ஸ்பூன் அளவு மட்டுமே ரத்தம் இருந்துள்ளது. யோர்க்ஷிரே – ஐ சேர்ந்த Maria மற்றும் Chris தம்பதியினருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் Frankie Morrison என்ற குழந்தை பிறந்தது.

அறுவை சிகிச்சையின் மூலம் இக்குழந்தை பிறந்துள்ளது, குழந்தை பிறந்து 2 நாட்கள் ஆகியும் அதன் உடலில் எவ்வித அசைவும் இல்லை. குழந்தையின் உடலில் ரத்தம் போதிய அளவு இல்லை. வெறும் 2 டேபிள் ஸ்பூன் அளவு ரத்தம் மட்டுமே இருந்துள்ளது. மாறாக குழந்தையின் உடல் முழுவதும் தண்ணீரே நிரம்பியிருந்தது.குழந்தை உயிர்பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதன் பின்னர் குழந்தைக்கு சிறிதளவு ரத்தப்பரிமாற்றம் செய்யப்பட்டு, இரண்டு நாட்களுக்கு பின்னர் உடல் லேசாக அசைந்துள்ளது.

அதன்பின்னர், ஒவ்வொரு மாதமும் தாயிடம் இருந்து குழந்தைக்கு ரத்தப்பரிமாற்றம் செய்யப்பட்டது. இதுவரை சுமார் 37 ml ரத்தப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இக்குழந்தைக்கு 12 மாதம் ஆகிவிட்டது. குழந்தை தற்போது நலமாக இருந்தாலும், அவளின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியவது அவசியம்.

ரத்தப்பரிமாற்றம் செய்த காரணத்தினால், எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், மிகவும் கவனமாக பார்த்துக்கொள்கிறோம். உயிர்பிழைப்பதே கடினம் என்ற நிலையில், அறுவை சிகிச்சை மூலம் இக்குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தாய் Maria கூறியுள்ளார்.