அகதிகளே…எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! அமைச்சரின் பகீர் அறிவிப்பு!!

422

625-0-560-350-160-300-053-800-668-160-90-1
பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து பிரான்ஸ் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் மற்றும் அந்த முகாம்கள் முற்றிலுமாக மூடப்படும் என பிரான்ஸ் அமைச்சர் இமானுவேல் கூறியுள்ளார்.ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற பல இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த 5700க்கும் மேற்ப்பட்ட மக்கள் பிரான்ஸில் உள்ள Calais Refugee Camp-ல் தங்கியுள்ளனர்.

வேறு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சேற்றிலும், துயரத்தை அனுபவித்து கொண்டும் இங்கு வாழ தேவையில்லை என கூறியுள்ள அமைச்சர் இமானுவேல், அந்த மக்களெல்லாம் சீக்கிரம் வெளியில் அனுப்பபடுவார்கள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த முகாம்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படும் என கூறியுள்ளார்.இதனிடையில் பிரான்ஸில் இருக்கும் தொண்டு நிறுவனங்கள் பிரான்ஸ் அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளது.