விண்வெளியில் பேசிய முதல் மனித உருவ ரோபோ!!

372

robot

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட கிரோபோ என்ற ரோபோ தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்துள்ளது.

ஜப்பான் உருவாக்கிய ரோபோ இது. இந்த ரோபோ தற்போது தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதுதான் விண்வெளியில் ஒலித்த முதல் ரோபோ குரலாகும்.

அகன்ற கண்களுடன் பெரிய சைசிலான கண்களைக் கொண்டது கிரோபோ ரோபோ. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி இந்த ரோபோ பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு வணக்கம் என்று தனது முதல் பேச்சில் தெரிவித்தது.

மேலும் நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ரோங்குக்கும் அது அஞ்சலி செலுத்தியது.

கிரோபோவின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் அது கூறுகையில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ஒரு ரோபோ புதிய பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தனது காலடியை எடுத்து வைத்தது என்று தன்னைப் பற்றியும் கூறியுள்ளது.