நாக சைதன்யாவுடன் அடுத்த ஆண்டு திருமணம் என்பதை உறுதி செய்துவிட்டார் சமந்தா. ஆனாலும் கூட அவரை சினிமாவில் நடிக்க இன்னமும் அணுகிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
கல்யாண பேச்சு வந்தும், முன்னணி ஹீரோயின்கள் லிஸ்டில் தான் இன்னமும் நீடிக்கிறார் சமந்தா. ஆனால், வரும் வாய்ப்புகளுக்கு அவர் போடும் ஒரே கண்டிஷன் நீண்ட காலத்துக்கு படப்பிடிப்பை இழுக்காமல் சீக்கிரம் முடிக்க வேண்டும்.
அப்படிபட்ட படமாக இருந்தால் மட்டும் வாங்க. இல்லாவிட்டால் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாராம்.
அதாவது அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம். தனது எந்தவொரு கமிட்மென் டும் திருமணத்தை பாதித்துவிடக்கூடாது என்பது தான் இந்த கண்டிஷனுக்கு காரணம்.
இந்த காரணத்தால் தான் நீண்ட கால தயாரிப்பான ‘வடசென்னை’ படத்தில் இருந்து விலகினார். ஆனால், சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். காரணம் பொன்ராம் விரைவில் படத்தை முடித்துவிடுவார் என்பதால்.






