அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை பிரஜையை இந்தோனேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்ரம் என்ற இந்த இலங்கை பிரஜை தெற்கு ஜகர்த்தா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகில் கடலில் மூழ்கிய படகில் அகதிகளை இவரே அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா நோக்கி 210 பேரை படகில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படகில் பயணித்த குழந்தைகள் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 10 பேர் வரையில் உயிரிழந்ததோடு 189 பேர் மீட்கப்பட்டனர். அத்துடன் பலர் காணாமல் போயினர்.
இலங்கை, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த படகில் பயணம் செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.