காதலனை நம்பி திருமணம் செய்ய போன காதலி: நண்பர்களால் நேர்ந்த விபரீதம்!!

437

1-54
தமிழகத்தில் காதலியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(27). இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இவர் கல்லூரி முடிந்ததும், சுரேஷ் என்பவரின் ஆட்டோ மூலம் வீட்டிற்கு செல்வதை பழக்கமாக வைத்துள்ளார். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளைடைவில் இருவருக்கும் காதாலாக மாற, பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர்.அதன் பின்னர் ஆட்டோ டிரைவர், அப்பெண்ணை திருமணம்செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வீட்டில் இருக்கு நகைகளை எல்லாம் எடுத்துவருமாறு கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி இப்பெண்ணும் வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.வெளியேறிய அவர்கள் நாகர்கோவிலில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் காலையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக தாலி வாங்கி வருவதாக கூறி வெளியில் சென்று விட்டார்.

அப்போது லாட்ஜின் பக்கத்து அறையில் இருந்த சிலர் இப்பெண் இருந்த அறைக்குள் வந்து கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் அப்பெண் கூச்சலிட்டும் லாட்ஜில் இருந்த யாரும் வரவில்லை. அப்பெண்ணுக்கும், இவர்களுக்கு இடையே நடந்த தொடர் தகராறின் பேரிலே அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.அதன் பின் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் அவர்களின் நண்பர் என்பதும் அவர் அழைத்ததின் பேரிலே தான் தாங்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.இதை அறிந்த பொலிசார் ஆட்டோ டிரைவர் சுரேஷ், அவரின் நண்பர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.