ஜெயலலிதாவைப் பார்க்க மோடி வராதது ஏன்..? கசிந்த உண்மை நிலவரம்!

415

jayalalitha
முதவ்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி இப்போதைக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வரவேண்டாம் என அதிமுக நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் வெளியான தகவல் படி, நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் வெளியாட்கள் யாரையும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் முதல் அனைவரும் முன்னெச்சரிக்கையான ஆடைகளுடன் வந்து செல்கிறார்களாம்.ஆளுநர் வித்யாசாகர் முதல் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட தலைவர்கள் அனைவரும் மருத்துவக் கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் ஜெயலலிதா தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வார்டை பார்த்து விட்டுச் சென்றுள்ளார்கள்.

இதனால் தான் பிரதமரின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது,முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக பார்க்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்த பின்னர், பிரதமர் மோடி அப்போலோ வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களைப்போல மருத்துவர்களிடம் மட்டும் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு பிரதமர் செல்வது முறையல்ல என கூறியுள்ளார்.