ஒரே ஒரு விஷயத்துக்காக அதிக பணம் செலவு செய்த நடிகைகள்!!

441

samantha-spoiled-shruti-dream-project

நடிகைகள் சினிமாவில் ஒரு நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் அடுத்து அவர்களுடைய டார்க்கெட் வீடு, கார் வாங்குவது தான்.பல நடிகைகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வீடுகள் வாங்கியுள்ளனர். அதேபோல் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோர் பல கோடிகளுக்கு கார் வாங்கியுள்ளனர்.

ஹன்சிகா பி.எம்.டபுள்யு 5 சீரிஸ் செடன் வாங்கியுள்ளார். அதோடு இவரின் அதிர்ஷ்ட எண் 9 என்பதால் அந்த எண்ணை வாங்க அதிக பணம் செலவு செய்துள்ளார்.அதேபோல் ஸ்ருதிஹாசன், சினிமாவில் நுழைந்ததில் இருந்து சொந்த காலில் நிற்பதையே அவர் விரும்புகிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தில் அவர் ரூ.1½ கோடி செலவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வாங்கி இருக்கிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த சமந்தா இப்போது சமூக சேவைகள் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். பி.எம்.டபுள்யு எக்ஸ் 5 சீரிஸ் காரை ரூ.76 லட்சம் செலவில் வாங்கி இருக்கிறார். இவரும் அதிர்ஷ்ட எண் 9ஐ பெற பணம் செலவு செய்துள்ளார்.