நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி, ரம்மி என முக்கிய படங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை படத்தின் மூலம் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
தொடர்ந்து நடித்து வந்த அவர் தர்மதுரை படத்தில் அன்புசெல்வியாக நடித்து எல்லோரையும் ஈர்த்தவர்.கவர்ச்சியுடன் நடிக்க விரும்பும் இவருக்கு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் வெற்றி பெறுவதால் இயக்குனர்கள் சென்டிமெண்டாக அதே கதாபாத்திரத்தை மட்டுமே இவருக்கு கொடுக்கிறார்கள்.
தற்போது மா.கா.பா உடன் கடலை படத்தில் நடித்து வரும் இவர் பயங்கர கவர்ச்சியுடன் படு ஆட்டம் போட்டுள்ளாராம். தொடந்து இது போல நடிக்க தீவிர ஆர்வம் காட்டுகிறார்.மேலும் இயக்குனர் அமீரின் படத்தில் புதியதாக ஒப்பந்தமான இவர் தீவிரமாக மதுரை தமிழ் கற்றுவருகிறாராம்.