120 அடி உயரத்தில் இருந்து விழுந்த நாயகன்!!

247

hero

நடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் அதாறு உதாறு என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் அராத்து, தமிழ் தெழுங்கு ஆகிய இரு மொழிகளில் ஷிவானி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

அதாறு உதாறு படப்பிடிப்பிற்காக இறுதிக்கட்ட சண்டை காட்சிக்காக வடசென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு கதாநாயகன் விஜய்கார்திக் 20 க்கும் மேற்பட்ட வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்று நடந்த படபிடிப்பில் 120 அடி உயரத்தில் இருந்து கதாநாயகன் தாவும் காட்சி படமாக்கபட இருந்ததாகவும் ஸ்டன்ட் மாஸ்டர் தவசிராஜ் அது ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு டூப் ஸ்டன்ட் நபர் வைத்து எடுக்க திட்டமிடபட்டிருக்கிறது.

ஆனால் விஜய்கார்திக் அந்த காட்சியில் தனக்கு டூப் வேண்டாம் என்று கூறி அந்த காட்சியில் அவரே உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். துரதிஷ்டவசமாக கால் இடறி 120 அடி உயரத்தில் இருந்து விழுந்து சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். பதறிய படபிடிப்பு குழுவினர் அருகில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவருக்கு கால் முறிவு மற்றும் உடலில் காயங்கள் உள்ளதாகவும் பதற்றம் காரணமாக மயக்கமாக உள்ளதாகவும் மருத்துவர் அவரை ஒரு வார ஓய்வில் இருக்கும் படி அறிவுருத்தியுள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அதாறு உதாறு படக்குழுவினர் தெரிவித்தனர்.