4 மாதக் குழந்தையை கடத்திய பாசக்கார தந்தை : பிரான்ஸை கதிகலங்க வைத்த சம்பவம்!!

658

france

பிரான்சில் பெற்ற தந்தையே 4 மாத குழந்தையை கடத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு குழந்தை கடத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல ஊடகங்கள் வழியாக கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Grenoble பகுதியில் தாயுடன் வாழ்ந்து வந்த குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.

கணவன், மனைவி இருவரும் சட்டப்படி பிரிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை தாயுடன் Grenoble பகுதியில் இருந்துள்ளது. இந்நிலையில், தந்தைக்கு சட்டப்படி குழந்தையை பார்க்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை, Grenoble பகுதியில் தனது மனைவி வீட்டில் பால்கனிய வழியாக நுழைந்த கணவர், முன்னாள் மனைவியை தாக்கி குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறுநாள் காலை Echirolles பகுதியல் இருக்கும் ஒரு தொலைபேசி சாவடியிலிருந்து பொலிஸை தொடர்பு கொண்ட கணவர், குழந்தை தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் விடுக்கப்பட்ட கடத்தல் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.