இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 25பேர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைநாடு திரும்புகின்றனர். சுய விருப்பத்தின் அடிப்படையில் அவர் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கானஉயர்ஸ்தானிகரத்தின் அனுசரணையுடன் நாடு திரும்புகின்றனர்.
மதுரை விமான நிலையம் ஊடாக அவர்கள் கட்டுநாயக்கவை வந்தடையவுள்ளனர். இந்த தகவல்களை மீள்குடியேற்றத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
10 ஆண்களும் 15 பெண்களும் உள்ளடங்கியுள்ள இந்த அகதிகள், மன்னார், திருகோணமலை,வவுனியா, மாத்தளை மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர்.
இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் முகவரகம் இலவச விமானச்சீட்டுக்களை வழங்கியுள்ளது. அத்துடன் மீள் இணைப்பு கொடுப்பனவாக ஒருவருக்கு 75 டொலர்களும், போக்குவரத்துக்காக 19டொலர்களும் உணவு அற்ற தேவைகளுக்காக 75 டொலர்களும் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை இந்தியாவின் முகாம்களில் தங்கியிருப்பதாக கூறப்படும் 64 ஆயிரம் இலங்கைஅகதிகளில் 2011 முதல் இதுவரை 5140 பேர் சுய விருப்பத்தின்பேரில் தாயகம்திரும்பியுள்ளனர் என்று அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.






