யாழ் சம்பவம் : கைது செய்யப்பட்ட பொலிஸார் நீதிவான் முன் ஆஜர் செய்யப்படவுள்ளனர்!!

1098

j1

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் விபத்துதொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அலுவலர்களும் இன்று நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

யாழ்ப்பாண நீதிவான் முன்னிலையில் அவர்கள் ஐந்து பேரும் ஆஜர் செய்யப்படவுள்ளதாகபொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தமது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளைசெலுத்தி சென்ற நிலையில் அவர்கள் மீது பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இது சாதாரண விபத்து என்று கூறப்பட்டாலும் கூட, பிரதேச மக்கள், சம்பவம்இடம்பெற்ற போது துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்கக்கூடியதாக இருந்தது என்று சந்தேகம்வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் பிரேத பரிசோதனையின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமாணவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் 5 பொலிஸார்கைது செய்யப்பட்டனர்அ

அவர்களின் பணிகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.இந்தநிலையிலேயே அவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.