உலகை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் : காரணம் என்ன!!

519

art

பிரேசிலில் தேவாலயத்தில் இருக்கும் பாதிரியார் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் Montes Claros என்ற ஊரில் இளம் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தார்கள்.

அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள், அந்த சிறுமி தினமும் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்று Joao de Silva (54) என்னும் பாதிரியாரிடம் ஆங்கிலம் பயில்வது வழக்கமாகும்.

ஆனால் சில தினங்களாக அந்த சிறுமி அந்த பாதிரியாரிடம் பாடம் படிக்க செல்ல மாட்டேன் என அடம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியின் வரைதல் புத்தகத்தை எடுத்து அவளின் பெற்றோர் ஏதேச்சையாக பார்த்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அதில் ஒரு சிறுமி பயத்துடன் படுத்திருப்பது போலவும் அவளிடம் ஒரு ஆண் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்வது போலவும் வரையப்பட்டிருந்தது.

இதே போல ஆறு புகைபடங்களை அந்த சிறுமி வரைந்திருந்தார். எல்லாமே ஒரு ஆண் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற புகைப்படங்கள் ஆகும்.

உடனே நடந்ததை உணர்ந்த அந்த சிறுமியின் பெற்றோர் அந்த பாதிரியார் குறித்து பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

உடனே அந்த சர்ச்சுக்கு விரைந்த பொலிசார், குறித்த பாதிரியாரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.