யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவரை தண்ணீர் ஊற்றி கலைக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
யாரும் அற்ற நிலையில் கடைகளில் வழங்கும் உணவுகளை உட்கொண்ட அவர் கடைத்தெருவில் வாழ்ந்து வந்தார்.
எனினும் அவர் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்திருந்த கடையொன்றின் ஊழியரினால் தண்ணீர் ஊற்றப்பட்ட சம்பவம் பலரை சென்றடைந்தது.
இந்நிலையில் குறித்த முதியவர் பத்திரமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவையாளர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






