பெண் பொலிஸ் உடையில் உலாவிய மர்ம நபர் கைது!!

593

police

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடையில் நடமாடிய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று நுவரெலியா பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் கேகாலை பகுதியை சேர்ந்த லோகநாதன் வினோத்குமார் என்பவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் பொலிஸ் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதாக சந்தேகப்பட்டு உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டபோது சந்தேக நபர் பெண் பொலிஸ் ஆடை அணிந்த ஆண் ஒருவர் என்பதையும் அறிந்து குறித்த நபரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதேவேளை அவருக்கு எவ்விதம் பொலிஸ் ஆடை கிடைத்தது எனவும், ஏன் அவர் பெண் வேடத்தில் இருந்தார் என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.