மட்டக்குளி – சமித்புற பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்துக்கு மேற்பட்டவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும் ,மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை , பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






