தனது இரு பிள்ளைகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் பதுளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் மடுல்சீமை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தில் இரு மாதங்களேயான அப் பெண்ணின் மகன் மற்றும் இரண்டரை வயதான மகளுமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
முதலில் தனது பிள்ளைகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய அவர், பின்னர் அதே ஆயுதத்தை பயன்படுத்தி தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அப் பகுதி மக்கள் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் பொலிஸார் அப் பகுதிக்கு சென்று மூவரையும் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மடுல்சீமை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய பதுளை நீதவான் ருவன்திகா மாரசிங்க சந்தேகநபரான பெண்ணை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை அப் பெண் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளானவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.